economics

img

ரெப்போ வட்டி மீண்டும் 0.5 சதவிகிதம் உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் 0.5 சதவிகிதம் உயர்த்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

கடந்த மே 4-ஆம் தேதி நடந்த ரிசர்வ் வங்கி நிதி கொள்கைக்குழு, ரெப்போ வட்டியை 0.4 சதவிகிதம் உயர்த்தி 4.40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 8-ஆம் தேதி நடந்த நிதி கொள்கைக்குழு கூட்டத்தில், ரெப்போ வட்டியை மேலும் 0.50 சதவிகிதம் உயர்த்தி 4.9 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் உயர்த்தி 5.40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
.
ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கு, இனி கூடுதலாக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல், ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு இனி கூடுதல் சுமை ஏற்படும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;